மீண்டும் கொரோனா தொற்று பரவும் ஆபத்து ; தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார பிரிவினர் அறிவிப்பு!
Monday, July 13th, 2020நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர்.
தேர்தல் பிரசார கூட்டங்களில் சுகாதார சட்டத்திட்டங்கள் மீறப்படுவது அவதானிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும் என சுட்டிக்காட்டியுள்ளதுடன் பிரசார கூட்டங்களுக்கு உரிய எண்ணிக்கையை விடவும் அதிக மக்கள் வருவது வைரஸ் மேலும் பரவக் காரணமாகிவிடும் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பிரதான கூட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களது விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுதினம் – அமைதிக் காலத்தில் சட்டவிரோத செயல் ம...
காற்று மாசுபாடு அதிகரிப்பு - துவிச்சக்கரவண்டி பாவனையை மேம்படுத்த நடவடிக்கை - சில ஊக்குவிப்பு சலுக...
|
|