மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அபாயம் – பல்கலைக்கழகத்திற்கு தீவிர பாதுகாப்பு!

களுத்துறையில் இருந்து கதிர்காமம் வரையான பகுதிகளிலுள்ள அரச நிறுவனங்களை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் தகவலை பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தலை அடுத்து ருஹுனு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அரசாங்க பாதுகாப்பு பிரிவுகளுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளும் ஆபத்துக்கள் உள்ளதாகவும், அதற்கமைய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது
இதனை அடிப்படையாக கொண்டு ருஹுனு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு கோரிய பல்லைக்கழகத்தின் பீடாதிபதியின் கையொப்பத்துடன் கூடிய அறிக்கை ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

Related posts:
ஆசிரிய நியமனம், இடமாற்றம் தொடர்பான புதிய கொள்கை – ஜனாதிபதி!
திருமண பந்தத்தில் இணைபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதி முக்கிய பரிந்துரைகள் -சுகாதார அமைச்சு!
கணினித் திரை முன்னால் மாணவர்கள் அமர்ந்திருக்கும் கால எல்லை தொடர்பில் அதிக கவனம் வேண்டும் – எச்சரிக்க...
|
|