மீண்டும் கடற்றொழிலாளர் சங்கத் தலைவராகத் தெரிவானார்!

Tuesday, February 21st, 2017

வடமராட்சி கிழக்கு, உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு நேற்று முன்தினம் (19.02.2017) முற்பகல் 10.00 மணிக்கு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ஜெயராஜ் தலைமையில் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

சங்கத்தின் புதிய தலைவராக பொன்னுச்சாமி பிரேமதாஸ் மீண்டும் 3ஆவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உபதலைவராக நல்லையா யோகராசாவும், செயலாளராக சண்முகஐயா விஜிதரனும், உப செயலாளராக சின்னத்தம்பி பாலச்சந்திரனும், பொருளாளராக சுப்பிரமணியம் சிவகுமாரும் மற்றும் உறுப்பினர்களாக சின்னத்தம்பி சண்முகராசா, திருமதி உதயகுமார் வசந்தி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சமாச உறுப்பினர்களாக தங்கவேலு தங்கரூபன், பொன்னையா பிரேமதாஸ், சின்னத்தம்பி பாலச்சந்திரன், சுப்பிரமணியம் சிவகுமார், கணபதிப்பிள்ளை உதயரூபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பொன்னுச்சாமி பிரேமதாஸ் (அப்பன்) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kaddaikadu-attack-03

Related posts: