மீண்டும் இயல்புக்கு திரும்புகிறது யாழ். மாநகரம் – வர்த்தக நிலையங்களை திறப்பு பேருந்துகளும் வழமையான இடங்களிலிருந்து சேவைகளை முன்னெடுப்பு!

Thursday, April 8th, 2021

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவையை இன்று (08) தொடக்கம் மீளத் திறக்க கட்டுப்பாட்டுள்ளன.  .

கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர் அல்லது பணியாளர் உள்ள சுமார் 70 வர்த்தக நிலையங்களுக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

அவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மீளத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளமை அடுத்தே இன்றையதினம் கடைகள் திறக்கப்பட்டன.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று தொடக்கம் பேருந்து சேவைகளை நடத்த வடபிராந்திய போக்குவரத்து சபைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் பேருந்து சேவைகளும் வழமை போன்று தரிப்பிடங்களிலிருந்து சேவையில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பேருந்து சேவைகளிலும் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: