மீண்டும் இயங்கவுள்ள புகையிரதம்?

Wednesday, December 13th, 2017

ரயில்வே தொழிற்சங்கங்களது பணிப்புறக்கணிப்பு இன்று(13) முற்பகல் ரயில்வே தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், அமைச்சரவை துணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது. இதன் போது ரயில்வே வேலைநிறுத்தம் தொடர்பாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த விடயம் பற்றி அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன விபரித்தார்.

Related posts:


செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்தில் தீர்வு - ஈ.பி.டி.பியின் வன்னி மாவட...
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இலங்கையின் அரச தலைவர்களால் ஆரம்பித்துவைப்பு!
எரிபொருள் தட்டுப்பாடு என்று எண்ணி குழப்பமடையத் தேவையில்லை - வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இ...