மீண்டும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

Monday, February 11th, 2019

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அனுப்பிவைக்க முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

குறித்த பதவிக்காக மூன்றாவது முறையாக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதனிடையே, தூக்கு மேடைக்கு தேவையான ஏனைய உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.