மீசாலையில் கோர விபத்து – ஒருவர் பலி!

Wednesday, December 6th, 2017

கார் சாரதியின் கவனயினத்தால் மீசாலையில் நடந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியிலிருந்து மீசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றின் கதவு திறக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதிகள் இருவரும் கார் கதவுடன் மோதி கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் மீது ஏறியுள்ளது இதனால் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Related posts: