மீசாலையில் கால்நடை மருத்துவர் அலுவலகம்!

Tuesday, May 8th, 2018

சாவகச்சேரி பிரதேச கால்நடை மருத்துவர் அலுவலகம் 10 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடன் கூடியதாக மீசாலையில் அமைக்கப்படவுள்ளது.

சாவகச்சேரி பிரதேச கால்நடை மருத்துவர் அலுவலகத்திற்கென தனியான நிரந்தர கட்டடமில்லாததால் நீண்டகாலமாக பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் தனியார் கட்டடங்களில் பணியைத் தொடர்ந்தது.

இந்நிலையில் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான செயலகத்துக்கு அருகில் பிரதேச செயலரின் வதிவிடத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில் கால்நடை மருத்துவர் அலுவலகத்திற்கான அலுவலகம் அமைக்கப்பட்டு இயங்கிவருகிறது.

இந்தக் கட்டடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் அங்கு பணியாற்றுவோரும் சேவைகளைப் பெறச் செல்வோரும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டு வந்த இந்த நிலையில் பலரது முயற்சியினால் மீசாலையில் முதன்மைச் சாலையுடனான ஆலயமொன்றுக்குச் சொந்தமான காணி குத்தகை அடிப்படையில் பெறப்பட்டு கட்டடம் அமைக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

தென்மராட்சி பிரதேசத்தில் பெருமளவு கால்நடை வளர்ப்போர் தென்மராட்சி கிழக்குப் பகுதியில் அதிகமாக வாழ்வதாலும் அலுவலகத்தில் இரு மருத்துவர்கள் கடமையாற்றுவதால் இவர்களின் சேவையை விரிவாக்கவுமென வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவர் அலுவலகம் அமைக்கப்படவுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: