மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது – சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

அமெரிக்காவுடனான எம்.சி.சி. எனப்படும் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது என சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவிப்பை சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்
இதேவேளை சோஃபா ஒப்பந்தம் குறித்தும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அறிவித்துள்ளார்.
மேலும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்ந்தும் செயற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து குறித்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக 03 பேர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|