மிலேனியம் ஒத்துழைப்பு இலங்கைக்கு மீளக் கிடைத்துள்ளது!

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையினால், இடைநிறுத்தி வைக்கப்பட்ட வெளிநாட்டு இராணுவ நிதி ஒதுக்கீட்டையும் மிலேனியம் சவால் கூட்டுறவு திட்டத்தையும் அமெரிக்கா மீள அனுமதித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் அமெரிக்க குழுவொன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தக் குழுவுடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளில், குறித்த சலுகைகளை இலங்கைக்கு மீளப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மிலேனியம் சவால் திட்டத்தின் ஊடாக, காணி மற்றும் போக்குவரத்து துறைகளின் திட்டங்களுக்காக இலங்கை எதிர்காலத்தில் மானியங்களைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை 22 பில்லியன் டொலர் கடன் - ஆசிய அபிவிருத்தி வங்கி!
விஜயகலா மகேஸ்வரன் கைது!
தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவுபடுத்தும் திட்டம் ஆரம்பம்!
|
|