மிருசுவில் வடக்கு பகுதியில் பொதுச்சந்தை திறந்துவைப்பு!

மிருசுவில் வடக்கு பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக கிராமிய பொதுச் சந்தை ஒன்று அமைக்கப்பட்டு மக்களது பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வாழும் மக்களது தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் அப்பகுதி விவசாயிகளின் உற்பத்திகளை சந்தைப்படுத்தவதற்காகவும் ஒரு சந்தையை அமைத்து தருமாறு பலதரப்பட்டவர்களிடமும் குறித்த பகுதி மக்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக சந்தை தொகுதி அமைக்கப்பட்டு இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) அவர்களால் நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டதுடன் மக்களது பாவனைக்கும் கையளிக்கப்பட்டது.
குறித்த பகுதி சனசமூக நிலைய தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி மற்றும் குறித்த பகுதி மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|