மிருக வைத்தியர்களுக்கு பற்றாக்குறை – மிருக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!
Wednesday, May 31st, 2023சுமார் 60 மிருக வைத்தியர்கள், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாடு சென்றுள்ளதால், தமது தொழிற் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, மிருக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, இலங்கையில் அதிகளவு பால் உற்பத்தி இடம்பெறும் நுவரெலியா மாவட்டத்தின் 6 பிரிவுகளில், மிருக வைத்தியர்கள் இல்லை என அந்த சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வனஜீவராசிகள் மற்றும் விலங்கியல் பூங்கா திணைக்களத்திலும், மிருக வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
காசநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் 183 பேருக்கு 5,000 உதவித்தொகை!
மக்களின் வறுமையை விலைபேசும் கூட்டம் நாமல்ல - ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் தோழர்...
வெளிநாட்டு கடல் அறிவியல் ஆராய்ச்சி கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதை நிறுத்துவது குறித்து இல...
|
|