மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின்னல் தாக்கமே காரணம் – மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவிப்பு!

Wednesday, October 6th, 2021

நாட்டின் பல பகுதிகளில் நேற்று திடீரென மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையே காரணம் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு எவ்வித மோசடி செயற்பாடுகளும் காரணமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று முற்பகல் 11.45 அளவில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

எனினும், நண்பகல் 12.15 அளவில் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: