மின் பிறப்பாக்கிகள் சீரமைக்கப்பட்டுவரும் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின் தடை ஏற்படக்கூடும் – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Monday, December 6th, 2021

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின் பிறப்பாக்கிகள் சீரமைக்கப்பட்டுவரும் நிலையில் நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின்சாரத் தடைகள் ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, அண்மையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம், ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட மின்வெட்டு வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றாக இருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: