மின் பாவனையாளர்களுக்கு 3 பில்லியன் ரூபா சலுகை வழங்க இலங்கை மின்சார சபை தீர்மானம்!

Friday, July 31st, 2020

நாடளாவிய ரீதியில் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபா சலுகை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நுகர்வுக்கு உட்படுத்திய மின்சார பாவனைக்கே இவ்வாறு சலுகை வழங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 67 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முடக்க நிலை ஏற்பட்டதன் காரணமாக குறித்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களின் மின் கட்டணங்கள் அதிகரித்த தொகையில் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அக்காலப்பகுதியில் பாவனையாளர்கள் தொழில் நடவடிக்கைகள் இன்றி பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு அதற்கான சலுகையை வழங்குவதாக அறிவித்திருந்தது. இதையடுத்தே குறித்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: