மின் பாவனையாளர்களிடமிருந்து மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது மின் துண்டிப்பும் இல்லை – மின்சாரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Sunday, April 26th, 2020மின்பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணம் அறவிடப்படும் போது, மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது என்பதுடன் மின்பாவனைகளும் துண்டிக்கப்படமாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சமூக இடைவெளியை பேணும் வகையில் ஊரடங்கு சட்டம் நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மின்சார பாவனையாளர்கள் மாதந்த மின்கட்டணங்களை செலுத்த முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டது.
இதன் காரணம் மின்சார கட்டணம் செலுத்தும் காலவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை வழங்கப்பட்டது.
அத்துடன் மின்சார கட்டணம் செலுத்தும்போது மேலதிக கட்டணம் ஏதும் அறவிடப்படமாட்டாது. பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டண பற்றுச்சீட்டு விநியோகிக்கப்படாது என தெரிவித்த அமைச்சர் பொது மக்கள் மின்சார கட்டணம் செலுத்தும் போது விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கட்டணத்தை பகுதி அளவிலும் செலுத்த முடியும் என்றும் அவர் மலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|