மின் துண்டிப்புக்கு மின்சக்தி அமைச்சு பொறுப்புக்கூற வேண்டும் என்று உறுதியானால் பதவி விலக தயார் – மின்சக்தி அமைச்சர்..!

Sunday, August 23rd, 2020

அண்மையில் நாடடுமுழுவதும் ஏற்பட்ட மின்சாரம் துண்டிப்புக்கு காரணமான விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த குழுவின் அறிக்கை நாளை (24) திங்கட்கிழமை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மின் துண்டிப்புக்கு மின்சக்தி அமைச்சு பொறுப்புக்கூற வேண்டும் என்று உறுதியானால் அது தொடர்பில் தாம் எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கருத்து வெளியிட்டுள்ளார்.

“நான் 96 மணித்தியாலங்களே மின்சக்தி அமைச்சராக இருந்துள்ளேன். மின்சக்தி அமைச்சே தவறுக்கு காரணம் என்றால், செவ்வாய்க்கிழமையிலிருந்து நானல்ல மின்சக்தி அமைச்சிற்கு வேறு ஒருவர் அமைச்சராக இருப்பார் என்றும், இந்த நிகழ்வு இலங்கையில் முதற்தடவையாகப் பதிவாகும் எனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

Related posts: