மின் தடைப்பட்ட பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த திலீபன் எம். பி

Saturday, December 26th, 2020

வவுனியா திருநாவல்குளம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவரின் வீட்டுக்கு மின்சாரம் தடைப்பட்ட போதிலும் சீர்செய்யப்படாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்’ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் உடன் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பை பெற்றுக்கொடுத்துள்ளார்.

கொரனா தொற்று காரணமாக திருநாவல்குளம் பகுதியில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் ஒரு வீட்டிற்கு மின் தடை ஏற்பட்டமையினால் சுகாதார பிரச்சனை காரணமாக மின்சாரசபை ஊழியர்கள் மின் தடையை சீர் செய்ய அச்சமடைந்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாக சென்ற அவர் மின்சார சபை ஊழியர்களுடன் தொடர்புகொண்டு சுகாதார முறைகளை பின்பற்றி மின் இணைப்பை சீர்செய்ய ஏற்பாடு செய்திருந்தார். இந் நிலையில் குறித்த வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts: