மின் கட்டண நிவாரணம் தொடர்பில் அடுத்தவாரம் அறிவிக்கப்படும் – இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

Sunday, July 5th, 2020

கொரோனா அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மின் பாவனையாளர்களுக்கு வழங்ககூடிய மின் கட்டண நிவாரணம் தொடர்பாக அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் தற்போது அறிக்கை தயார் செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

அத்துடன் நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மின்சாரக் கட்டணமும் அதிகரித்ததனால் ,இந்த நிலை பொதுமக்களுக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியதாகவும்  விஜித்த ஹேரத் கூறினார். இதற்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக ஸ்தாபிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பூர்த்தியடைந்ததும், மக்களுக்கான நிவாரணங்கள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: