மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவு வெளியானது!

Tuesday, June 28th, 2022

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுகளுக்கு, பதிலளிக்கும், வகையில் குறித்த கட்டணங்கள் திருத்தப்பட்டு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 1 முதல் 30 அலகு வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணமான 30 ரூபாவை, 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாவை முன்மொழிந்திருந்தது.

மேலும், தற்போது 1 முதல் 30 அலகுக்கு இடையில் 2 ரூபா 50 சதங்களாக உள்ள அலகொன்றின் கட்டணத்தை 8 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட நிலையான மின் கட்டணத்தை 1,100 ரூபாவினால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்த போதிலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 300 ரூபாவை அதிகரிக்க முன்மொழிந்துள்ளது.

அத்துடன், தற்போது 4 ரூபா 85 சதமாக உள்ள 31 தொடக்கம் 60 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் விலையை 12 ரூபா 50 சதங்களால் அதிகரிக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை பரிந்துரைத்துள்ள போதிலும், கட்டணத்தை 10 ரூபாவினால் மாத்திரமே அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: