மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படும் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Tuesday, December 27th, 2022

மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ரொஹான் செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக இலங்கை மின்சார சபையால் மாத்திரம் தீர்மானிக்க முடியாது எனவும் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கட்டண அதிகரிப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை 

மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான ஊடக தகவல்களை மையப்படுத்தி இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதே இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என அதன் ஆணையாளர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் உரிய வகையில் கடமைகளை நிறைவேற்றியுள்ளனரா? என்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதன் இரண்டாம் கட்டம் இந்த வாரம் தொடரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளை விரைவில் நிறைவுறுத்தி அது தொடர்பில் முழுமையான அறிக்கையை வெளியிட எதிர்பார்ப்பதாக மனித உரிமைகள் ஆணையாளர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: