மின் கட்டணங்களை அதிகரிக்கப்படாது- அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய !

எவ்வித பிரச்சினைகள் வந்தாலும் பொதுமக்களின் மீது மேலதிக சுமைகளை ஏற்றும் விதத்தில் தற்போதுள்ள மின்கட்டணங்களை உயர்த்துவதற்கான நோக்கம் அரசுக்குக் கிடையாதென மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மின்கட்டணத்தை உயர்த்தும் நோக்கம் இருக்குமானால் அதைப் பகிரங்கமாக அறிவிக்குமாறு இலங்கை மின்சாரசபைத் தொழிற்சங்கங்கள் அமைச்சருக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல ரணசிங்க வித்தியாலயத்தில் நடந்த வைபவமொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் ஒருபகுதி வெள்ளத்தில் மூழ்கி யுள்ளபோது மற்றொரு பகுதி கடுமையான வறட்சியில் அல்லல்படுவதாகவும், நீர் மின்சாரத்துக்கான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் திருப்தியாக இல்லாததால் மின்னுற்பத்திக்குப் பெருமளவு எரிபொருள் செலவுசெய்யப்படுவதாகவும், எவ்வாறாயினும் தற்போதைக்கு மின் கட்டணங்களை உயர்த்தும் நோக்கம் அரசுக்குக் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|