மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கும் கோரிக்கை – அடியோடு நிராகரித்தது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Thursday, September 22nd, 2022

மின்வெட்டு நேரத்தை நீடிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி மறுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றுமுதல் இரண்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.

எனினும், மின்சாரத் தடை நீடிக்கப்படுவதற்கான, உரிய காரணத்தை மின்சார சபை சமர்ப்பிக்கவில்லை .

எனவே, ஒரு மணிநேரம் இருபது நிமிடங்களுக்கு நடைமுறையில் உள்ள திட்டமிடப்பட்ட மின்வெட்டைத் தொடர மட்டுமே ஆணைக்குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: