மின்வெட்டு குறித்து மின்சார சபையின் அறிவிப்பு!

Tuesday, April 3rd, 2018

வரட்சியான காலநிலை காணப்பட்டாலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலையினால் மின்சார உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின்சார உற்பத்தி வீழ்ச்சி காரணமாக மின் வெட்டு அமுல்படுத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர் மின் உற்பத்தி நிலையங்களின் பிரதான நீரேந்து நிலைகளான விக்டோரியா, ரந்தெனிகல, கொத்மலை, காசல்ரீ, சமனலவெவ ஆகியனவற்றின் நீர் மட்டம் 50.2 வீதமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் இந்தக் காலப்பகுதியில் குறித்த நீரேந்து பகுதிகளின் நீர்மட்டம் 35 வீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையிலும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: