மின்பாவனையாளர்களுக்கு சலுகை விலையில் எல்.ஈ.டி மின்குமிழ்கள்!

Wednesday, October 10th, 2018

மின்பாவனையாளர்களுக்கு சலுகை விலையில் எல்ஈடி மின்குமிழ்களை வழங்கும் வேலைத்திட்டம் இந்த மாத நிறைவுப் பகுதியில் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது இது பரீட்சார்த்த செயற்திட்டமாக பொலன்னறுவை, ஹொரணை, கேகாலை பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.10 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு இந்த மின்குமிழ்களை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 3 இலட்சம் பாவனையாளர்களுக்கு எல்ஈடி மின்குமிழ்கள் வழங்கப்படும்.மின்கட்டண பட்டியல் மூலம் பாவனையாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.மாதாந்தம் 90 அலகுகளுக்கு குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் பாவனையாளர்கள் இதற்குத் தகுதி பெறுகின்றனர்.மின் குமிழ்களுக்கு உரிய பணத்தை தவணை அடிப்படையில் மின்சார பட்டியலுடன் செலுத்த முடியும்.

Related posts:

அடுத்த ஆண்டு பெப்ரவரிவரை பரீட்சையை ஒத்திவையுங்கள் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உயர்தர மாணவர்கள்...
நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என ஊகிக்க முடியவில்லை - முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ த...
பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றல் கொண்ட மாகாணமாக உருவாகின்றது வடக்கு - அதன் மையமாக பூ...