மின்னல் தாக்கும் ஆபத்து – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Saturday, April 17th, 2021

மின்னல் தாக்கத்தினால் ஆபத்து ஏற்படும் நிலைமை தொடர்ந்தும் உள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியில் வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் நேற்று மாலை உயிரிழந்தனர்.

இந்த நிலையில், வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. அதிக மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மரங்களின் கீழ் நிற்றல்,கடல்பகுதிகளில் தொழிலில் ஈடுபடுதல், தொலைபேசி மற்றும் மின்சார உபகரணங்களை பயன்படுத்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

000

Related posts:


குரங்கம்மை நோய் தொடர்பாக மக்கள் பீதியடைய தேவையில்லை - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் ச...
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச் சட்டமூலத்தின் ஒரு சில ஏற்பாடுகள் நாடாளுமன்ற குழு நிலையில் திருத்தப்...
உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்க சவுதி அரேபியா செல்லும் வெளியுறவு அமைச்சர்...