மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழப்பு – முல்லைத்தீவில் சோகம்!

Friday, April 16th, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல் வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

18 மாவட்டங்களுக்கு நேற்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு, மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு வயல் வெளியில் விவசாய நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் கனமழையும் மின்னல் தாக்கமும் ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 3 விவசாயிகளே மின்னல் தாக்கம் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் குமுழமுனை மேற்கு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை மத்தி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுவர்னன், வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய சுஜீவன் ஆகிய குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் எனவும் தெரிவிக்க்கப்படுகின்றது.

Related posts:

தேர்தல் வெற்றிக்காக கொள்கைகளை மாற்றும் கேவலமான அரசியலை எப்போதும் நாம் மேற்கொண்டது கிடையாது – ஈ.பி.டி...
குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என இனியும் நம்மை நாமே குறை கூறிக் கொள்வதில் பலனில்லை – பிரதமர் மஹிந்த...
நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ...