மின்சார விநியோகம், வைத்தியசாலை உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!

Saturday, February 12th, 2022

மின்சார விநியோகம், வைத்தியசாலை உள்ளிட்ட மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள், நோயாளர் பராமரிப்பு சேவைகள் மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து அவசியமான சேவைகள் மற்றும் தொழில்கள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: