மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான மூலோபாயத் திட்டம் ஒன்றைத் தயாரிக்க சுற்றுச்சூழல் அமைச்சர் அளித்த தீர்மானத் துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவல்படி 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தாண்டியுள்ளது.
அந்த வாகனங்களில் கணிசமானவை 10 ஆண்டுகளுக்கும் அதிகமானவை. இது போன்ற பழைய வாகனங்களை முறையாக பராமரிக்காமை தீங்கு விளைவிக்கும் வாயு வெளியேற்றத்துக்கு வழிவகுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் 60 வீதமான வளி மாசடைதல் வாகனப் புகைகளால் ஏற்படுகிறது என்பதை மொரட்டுவ பல்கலைக்கழகம் வேறு சில நிறுவனங்களுடன் மேற்கொண்ட பல ஆராய்ச்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவது அரசாங்கம் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்பதால் புதுப்பிக்கத்தக்க சக்தியை வாகன நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|