மின்சார பாவனையாளர்களுக்கு இலவச மின் குமிழ்கள்!

Tuesday, February 7th, 2017

இலங்கை மின்சாரசபை, பாவனையாளர்களுக்கு இலவசமாக எல்.ஈ.டி மின் குமிழ்களை வழங்க உள்ளது. 60 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை மாதாந்தம் பயன்படுத்துவோருக்கு இவ்வாறு எல்.ஈ.டி மின்குமிழ்கள் வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு வழங்கப்படும் மின் குமிழ்களுக்காக பாவனையாளர்களிடமிருந்து மாதாந்த கட்டணத்தின் ஊடாக பணம் அறவீடு செய்யப்படாது என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மின்குமிழ்களை பயன்படுத்துவதனால் மாதாந்தம் சேமிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டு மின்குமிழ்களுக்கான செலவு ஈடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மின்சார சபையினால் வழங்கப்பட உள்ள எல்.ஈ.டி மின் குமிழ்களுக்கு மூன்றாண்டுகள் உத்தரவாதம் வழங்கப்பட உள்ளது. வறட்சியான காலநிலையின் போதும் மின்சாரத்தை தொடர்ச்சியாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

SLV behält sich vor, die Nutzung der Bilddaten demjenigen zu entziehen, der die SLV Produkte erheblich unter dem empfohlenen Verkaufspreis an den Endanwender anbietet. Dies gilt vor allem für Anbieter der SLV Produkte im Internet Eine Weitergabe dieser Bilddatei an Dritte bedarf der ausdrücklichen Genehmigung von SLV Elektronik GmbH

Related posts:


முரண்பட்ட நேர அட்டவணையால் பாதிக்கப்பட்ட ஏ.எல். பரீட்சாத்திகள்! கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் ஆணையாள...
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய வெளிவிவகார ...
இலங்கை அரசின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காகவே நானோ நைட்டிரஜன் உரத்தை இந்திய வழங்கியுள...