மின்சார நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது – துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதும் சிறந்ததென அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியானது எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது என்றும் ஆகவே துவிச்சக்கர வண்டியை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கேட்டுக்கொண்டார்.
ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் குழந்தைகள் உட்பட பலர் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும் நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் வீடுகளில் மின்சார பாவனையை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் கலங்களுக்காக மக்கள் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முடிந்தால், வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுற்றுலாப் பயணிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த முயற்சி!
அதிபர் – ஆசிரியர்களை சேவைக்கு அழைக்கும் முடிவில் மாற்றம் - கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின பதவியேற்பு!
|
|