மின்சார துண்டிப்பை நீடிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

நாட்டில் இன்றுமுதல் எதிர்வரும் 19 ஆம் திகதிவரையான காலப்பகுதியில், மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் மூன்று தினங்களில் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
A முதல் L மற்றும் P முதல் R ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி!
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த பொது இடங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற...
காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பணம் சிறைக்கு மாற்றம்!
|
|