மின்சார தடை – 8 மணித்தியாலத்தில் 100 கோடி ரூபாய் நட்டம் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Tuesday, August 18th, 2020

நேற்றையதினம் கெரவலப்பிட்டிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் 8 மணி நேர மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு 100 கோடி ரூபாயை விடவும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 12.45 மணி முதல் சில பகுதிகளில் நள்ளிரவு வரை இந்த மின்சார தடை ஏற்பட்டது.

பொதுவாக நாள் ஒன்றுக்கு 1.8 மில்லியன் மின்சார யுனிட்களும் இரவில் 2 மில்லியனுக்கும் அதிகமான மின்சார யுனிட்கள் நாடு முழுவதும் வழங்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார வழங்கும் காலத்தில் மின்சார யுனிட் ஒன்றிற்கு 125 ரூபாய் பொருளாதார நட்டம் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே மின்சார தடையால் நீர் தடையும் நேற்று ஏற்பட்டது. அத்துடன் கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது. எப்படியிருப்பினும் இது ஒரு திட்டமிட்ட சதி நடவடிக்கையாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என தான் நம்புவதாக அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: