மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் – மின்தடை தொடர்பில் துறைசார் தரப்பினருக்கு ஜயாதிபதி ஆலோசனை!

Monday, January 24th, 2022

மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச   ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சார சர்ச்சை தொடர்பில் அரச தலைவர்  செயலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்சார துண்டிப்பு குறித்து, அமைச்சர் உள்ளிட்ட உரிய உயர் அதிகாரிகளுடன் அரச தவைலர் இன்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இந்நிலையில்

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் இயங்காமை காரணமாக இன்று நான்கு கட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த மின் துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை எவ்வித அறிவிப்பையும் வெளியிட்டிருக்கவில்லை.

இதேவேளை

தற்போதைய மின்சக்தி நெருக்கடிக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படாமல் தீர்வு காண முடியும் என நம்புவதாக மின்சக்தி அமைச்சரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இத்தனை தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய வங்கி மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி சில தீர்மானங்களை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் பல தொழிற்சங்கங்கள் 24 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

24 மணி நேர மின்வெட்டால் நாட்டில் மெழுகுவர்த்தி தட்டுப்பாடு ஏற்படும் என சிலர் எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் பொதுமக்களை விட்டு ஓடவில்லை. மின்வெட்டு இல்லாமல் நாட்டை முன்னெடுப்போம் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்தவாரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாததால், இந்த உறுதிமொழியை நிறைவேற்றியதாக அவர தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள சில மின்சாரத் தடைகள் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவங்கள் குறித்து ஆராய நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை கிடைத்தவுடன் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

தற்சமயம் அரச அமைப்புகள் மற்றும் திணைக்களங்களுக்கு இடையில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் ஆனால் நாடு டொலர் நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. கொவிட் -19 தொற்றுநோயால் முழு உலகமும் டொலர் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

முன்னர் போன்று எந்தவொரு பொருளையும் கொள்வனவு செய்வதற்கு கடன் பத்திரங்களை திறக்க முடியாது. மத்திய வங்கிக்கு தேவையான டொலர்களை செலுத்திய பின்னரே கடன் பத்திரங்களை திறக்க முடியும்.

தற்போதைய நிர்வாகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க மாட்டோம் எனவும் அவர் உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி விரைவில் 5% ஆகக் குறைக்கப்படும் என மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அனல் மின் நிலையங்கள் முழுக் கொள்ளளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும் அது நாட்டின் 70 வீத தேவையை மட்டுமே பூர்த்தி செய்வதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மீதமுள்ள 30 வீதம் நீர் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் பெறப்பட வேண்டும்.

நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங் களின் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்து வருவதாகவும், இவ்வாறான நிலையில் நீர் மின் உற்பத்தி 5% ஆக குறைவதாகவும் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: