மின்சார சபை மீது கடுப்பான சங்கக்கார!

Friday, December 8th, 2017

இலங்கை மின்சார சபையின் செயற்பாடு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அதிருப்திவெளியிட்டுள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மின்சாரம் தடைப்பட்டது. இதன்போது கொழும்புமின்சார சபை அலுவலகத்தினை தொடர்பு ஏற்படுத்திய போதும் பதில் கிடைக்கவில்லை என குமார் சங்கக்கார அதிருப்திவெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து சங்கக்கார பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மின்சார சபையை தொடர்பு கொள்ளமுடிந்த ஒருவரேனும் இருக்கின்றீர்களா எனக்  கேட்டுள்ளார். இதற்கு பலர் பதிலளித்துள்ளனர்.ஆயினும் கடந்த 4ஆம் திகதி மின்சாரம் வழமைக்கு திரும்பியமை குறித்து தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.


அரசாங்க நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு; சுகாதார அமைச்சு விசேட சுற்று நிருபம்!
வழிகாட்டல் குழு அடுத்த மாதம் கூடுகின்றது!
ஓய்வுநிலை ஆசிரியர் சின்னத்தம்பியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...
டங்கன் வைட்டின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட தபாலுறை!
வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!