மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரிக்கை!
Tuesday, April 10th, 2018இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் இரண்டு வாரங்களுக்குள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
நீண்டகால மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில் தாம் முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து இலங்கை மின்சார சபை எவ்வித பதிலையும் வழங்கவில்லை எனவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தச் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை நீண்டகால மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவுவதில் அக்கறையின்மை காட்டுவதாகவும் இலாப நோக்கில் செயற்படும் தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஊடாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்து மின்சார சபை அதிகாரிகள் ஆதாயமீட்டுவதாகவும் சௌமிய குமாரவடு குற்றம் சாட்டியுள்ளார்.
Related posts:
|
|