மின்சார சபையின் முக்கிய அறிவித்தல்!  

Monday, September 4th, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் இந்த மாதத்தின் குறிப்பிட்ட தினங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று திங்கட்கிழமை(04) யாழ். மாவட்டத்தில் மானிப்பாயின் ஒரு பகுதி, அரசடி, கட்டுடை, பிப்பிலி ஆகிய பிரதேசங்களில் பிற்பகல்-01 மணி முதல் 05 மணிவரை மின்சாரத் தடை அமுலிலிருக்கும்.

வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் இன்று மின்சாரத் தடை அமுலிலிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை-09.30 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளத்திலிருந்து செட்டிக்குளம் வரை, செட்டிக்குளம் வைத்தியசாலை, செட்டிக்குளம் தொலைத்தொடர்பு நிலையம், செட்டிக்குளம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சாரத் தடை காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts: