மின்சார சபைக்கு நீதிமன்ற அழைப்பாணை!

Saturday, September 15th, 2018

இலங்கை மின்சார சபை நிர்வாகத்துக்கு பொதுவசதிகள் சபைக்கு செலுத்த வேண்டிய 19 கோடி ரூபா தொடர்பில் நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி, பகிர்வு மற்றும் விநியோகம் போன்ற செயற்பாடுகளுக்காக மின்சார சபையினால் வருடாந்தம் குறிப்பிட்ட வரித் தொகை ஒன்றை பொதுவசதிகள் சபைக்கு செலுத்த வேண்டியுள்ளது.

எனினும் இந்த ஆண்டுக்கான வரியாக 19 கோடியே 20 லட்சம் ரூபாவை இதுவரை மின்சார சபை செலுத்தத் தவறியுள்ள நிலையில், பொது வசதிகள் சபை அதற்கெதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

மின்சார சபையின் சொத்துக்களை முடக்கி விற்பனை செய்தேனும் தமக்கான வரிப்பணத்தை பெற்றுத் தருமாறு பொதுவசதிகள் சபை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் 17ம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ள கொழும்பு மாவட்ட நீதிமன்றம், அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மின்சார சபையின் நிர்வாகத்துக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

Related posts: