மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு எரிபொருள் வழங்குவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதி!

Wednesday, February 2nd, 2022

இலங்கை மின்சார சபையின் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு, ஒரு வாரத்திற்கு அவசியமான எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதாக, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தியுள்ளார் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில், இன்றையதினத்திற்கு மாத்திரம் மின்னுற்பத்தி செய்வதற்கான டீசல் கையிருப்பில் உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அடுத்துவரும் நாட்களுக்கு அவசியமான டீசலைப் பெற்றுக்கொள்வதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

Related posts: