மின்சார கட்டண முறையில் மாற்றம்!

Thursday, May 18th, 2017

மின்சார கட்டண முறையில் மாற்றங்களை கொண்டு வர இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோர் அதற்காக செலுத்தக் கூடிய கட்டண முறையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

நுகர்வோர் முறையில் (நேரம்) மாற்றம் ஏற்படக்கூடிய கட்டண முறையை (Time of the day terrify) தெரிவு செய்யும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.இலங்கை மின்சார வாரியம் மற்றும் இலங்கை மின்சார நிறுவனத்தினால் உள்நாட்டு மின்சாரம் நுகர்வோருக்காக, அவர்களின் மின்சார பயன்பாட்டு முறையில் (நேரம்) மாற்றம் ஏற்படுத்த கூடிய கட்டண முறை ஒன்றை (Time of the day terrify) தெரிவு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டணம் எந்த முறையிலும் மாற்றம் ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனைக்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த முறையை செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மின்சார நுகர்வோரின் மின்சார பயன்பாட்டில் இரவு 10.30 முதல் காலை 05.30 வரையில் ஒரு அலகிற்கு 13 ரூபாய், காலை 5.30 முதல் மாலை 6.30 மணி வரை ஒரு அலகிற்கு 25 ரூபாய், மாலை 6.30 முதல் இரவு 10.30 வரை ஒரு அலகிற்கு 54 ரூபாய் எனவும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார கட்டண முறை அறிமுகப்படுத்தி வைப்பதன் ஊடாக மின்சார நுகர்வோரின் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படாதென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த முறையில் நாள் ஒன்றுக்கு அதிக மின்சார தேவை காணப்படுகின்ற மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரையிலான காலப்பகுதியினுள் மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொள்வதே இதன் எதிர்பார்ப்பாகும். இந்த கட்டண முறை நுகர்வோர் விரும்பினால் மாத்திரம் தெரிவு செய்துக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: