மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு செய்து வருவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ஒரு மாதம் ஆகும் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், மின்சாரம் துண்டிக்கப்படும் இவ்வேளையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது நியாயமானதல்ல என தமது ஆணைக்குழுவின் அபிப்பிராயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக் 2016
இந்தியாவை விட இரண்டு மடங்காகிய இலங்கையின் மின்சார செலவு - இந்திய மின்சக்தி அமைச்சின் அறிக்கையில் சட்...
இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசல் - கனேடிய வர்த்தக்கத்துறை அமைச்சரின் இந்திய பயணம் ஒத்திவைப்பு!
|
|