மின்சார கட்டண அதிகரிப்பினால் சாதாரண மக்களும் வணிக வியாபாரிகளும் பாரிய பணப் பிரச்சினையிற்கு முகம் கொடுத்துள்ளனர் – நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா சுட்டிக்காட்டு!

Saturday, October 28th, 2023

நாட்டில் தொழிற்சங்கங்களிற்கே மின்சார கட்டணம் அதிகரிப்பின்னால் சாதாரண மக்களும் சரி வணிக வியாபாரிகளும் சரி பாரிய பணப் பிரச்சினையிற்கு முகம் கொடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (27) கொழும்பில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் நன்கு அறிந்த விடயம் 23% தொழிற்சங்கள் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இவ் மின்சார கட்டணம் அதிகரிப்புதான்

இதற்கு மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையால் இன்னும் வீழ்ச்சி ஏற்படும். இதனால் நஷ்டத்தை மட்டுமே கஷ்டங்களை மட்டுமே மக்களிற்கு வழங்குவது சரியல்ல இதனால் நாடு பாரிய பாதிப்பிற்கு முகம் கொடுக்க நேரிடும். என தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றும் பொது ஜன பெரமுன கட்சியினர் கூறுவது மின்சார கட்டணம் அதிகரிப்பிற்கு மின்விளக்குகளை அணைத்தால்  மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏற்படாதாம் மின் விளக்குகள் அனைத்தால் மின்சார கட்டணம் குறையும் என்பது எல்லோருக்கும் தெரியும். அது நிவாரணம் அல்ல. இவ்வாறு உடனடியாக இவ் மின்சார கட்டணம் அதிகரிக்க முடியாது. என நிரோஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் - வர்த்தகர்களுக்கு பிரதமர் மஹிந்த ...
சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல் - தேர்தல் ஆணைக்குழு அ...
நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வாங்குவது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கலந்துரையாட...