மின்சார கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி – அங்கீகாரம் வழங்கினாலும் கட்டணம் அதிகரிக்கப்படாது – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022

மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை அடுத்தே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

எனினும் நுகர்வுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அனுமதி வழங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அமைச்சர், மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தங்களுக்கு, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளமையை பொறுத்தவரையில் இது முதல் தடவையல்ல.

2015 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இந்த யோசனையை நடைமுறைப்படுத்தவோ, திருத்தவோ அல்லது நிராகரிக்கவோ அமைச்சரவைக்கு அதிகாரம் இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: