மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கவில்லை – அமைச்சர் ரமேஷ் பத்திரண!

Tuesday, March 22nd, 2022

மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை.

எனினும், புகையிரத கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: