மின்சாரம் துண்டிக்கப்படும் சரியான நேரத்தை தெரிவிக்க வேண்டும் – துறைசார் தரப்பினரை ஜனாதிபதி பணித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவிப்பு!

மின்வெட்டு ஏற்பட்டால் மின்வெட்டு ஏற்படும் நேரத்தை தெளிவாக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்று (7) பிற்பகலில் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் மின்சாரம் துண்டிக்கப்படாமல் மக்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முயற்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி கூட்டத்திலிருந்து திரும்பும் வழியில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடைதான் சமீபத்திய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த திடீர் மின் தடை காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த திடீர் மின்தடை நாசகார வேலை என தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அடுத்து குறித்த சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரத்நாயக்க இதன்போது தெரிவித்தள்ளார்.
இதேவேளை, மின்வெட்டு இன்றி இன்றையதினம் மின்சாரத்தை வழங்க முடியும் என ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|