மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!
Friday, August 18th, 2023மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சார விநியோகம் தொடர்புடைய சகல சேவைகளும், கனியவள உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல், விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வைத்தியசாலைகள், மருந்தகங்கள், நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளித்தல் என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஊடக சட்டம் தொடர்பில் அரச தகவல் பணிப்பாளர் நாயகத்தின் கூற்று உண்மைக்குப் புறம்பானது - சுதந்திர ஊடக இ...
திரிபோஷா வழங்கலை ஊக்குவிப்பதற்கு இலங்கைக்கு ஆறு இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவி!
இலங்கையில் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் 82 கோவிட் நோயாளிகள் - பிரதி பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் ...
|
|