மின்சாரத் தடையைக் கட்டுப்படுத்த விசேட மின் சட்டமூலம்!
Thursday, March 17th, 2016
திடீர் மின்சாரத் தடையைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட மின் சீர்திருத்த சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய அசாதாரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படும் சந்தர்ப்பத்தில், அது தொடர்பாக மின்சார சபையின் பொறியியலாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டியவர்களகாக இந்த புதிய சீர்திருத்த சட்டமூலத்தினால், கருதப்படுகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இவ்வாறான மின்சார செயலிழப்பின் போது பொறுப்புக் கூறுவதற்கு யாரும் முன்வராத ஒரு நிலைமை காணப்படுவதைக் கருத்தில் கொண்டே இந்த சட்டமூலத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
Related posts:
மத்திய அரசாங்கத்தின் கீழ் வரவுள்ளது ஆதார வைத்தியசாலைகள் - அமைச்சர் ரஜித!
பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - இருவர் படுகாயம்!
யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகள் ஆரம்பம் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
|
|