மின்சாரத்துறையை மறுசீரமைப்பது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவை அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, October 31st, 2023

இலங்கையின் மின்சாரத்துறையை மறுசீரமைப்பது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவை அங்கீகாரத்துக்காக  அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

முன்மொழியப்பட்ட உத்தேச மின்சாரத் துறை மறுசீரமைப்பு சட்டமூலம் கடந்த 10 மாதங்களாக தயாரிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் மின்சாரத் துறை, துறைசார் நிபுணர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முக்கிய தரப்பினரின் உதவியுடன் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாகவும் கஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே 03 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய தாழமுக்கம் நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் வானிலையில் மாற்றம்!
வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயனாளியாக தேர்வு செய்யப்படாத மக்கள் பிரதேச செயலகங்களில் முறையிட்...
தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச வுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்க நடவடிக...