மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கவனம் !

Thursday, November 25th, 2021

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் முதலாவது அதிநவீன தொழில்நுட்பத்திலான கேபிள் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய போது அவர் இது குறித்துக் கூறியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 71 சதவீதமானவை, வாகனங்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுகிறது  

அவ்வாறென்றால், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை நாம் ஏன் இறக்குமதி செய்ய முடியாது என்ற கேள்வியையும் அரச தலைவர் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: