மின்சாரக் கட்டணத் திருத்தம் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர், இறுதித் தீர்மானம் – ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, July 10th, 2024

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர், இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் பதிவு செய்த பல்வேறு தொழிற்துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 46 பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையானது எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த முன்மொழிவுகளின்படி, குறைக்கப்பட்ட கட்டணங்களின் ஒட்டுமொத்த சதவீதம் 13.8% ஆகும்.  அதன்படி, குடியிருப்புகளுக்கான கட்டணத்தில் 25.5% குறைப்பும், மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 3% குறைப்பும் அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுகளின்படி விடுதிகள் மற்றும் தொழிற்துறைக்கான கட்டணக் குறைப்பு எதுவும் முன்மொழியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: